நாட்டில் ஜனநாயகத்தினை பாதுகாக்குமாறு கோரி


(க.கிஷாந்தன்)
நாட்டில் ஜனநாயகத்தினை பாதுகாக்குமாறு கோரி அட்டனில் 04.11.2018 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதியே ஜனநாயகத்தினை காப்பாற்று என்னும் தலைப்பில் அட்டனில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சிறுபான்மை சமூகம் ஐக்கிய தேசிய கட்சியின் கோரிக்கையினை கருத்தில் கொண்டே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவுசெய்த நிலையில் அந்த கோரிக்கையினை புறந்தள்ளி ஜனாதிபதி இன்று செயற்படுவதாகவும் இதன்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அட்டன் மணிகூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற கே. கே.பியதாஸ புதிய அரசாங்கத்துடன் இணைந்துக் கொண்டால் தனக்கு அமைச்சுப் பதவி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே உடனடியாக நாடாளுமன்றை கூட்டுமாறு வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.