அவசரமாகக் கூடுகிறது மு.கா

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் உயர்பீடம், நாளை (11) அவசரமாக கூடவுள்ளதாக, கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லீம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர், கடந்த சில தினங்களுக்கு முன்னர், உம்ரா சென்றிருந்த நிலையில், நாளை, நாடு திரும்பவுள்ளனர்.
நாடாளுமன்றம் நேற்று, நள்ளிரவு கலைக்கப்பட்ட நிலையில், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில், இக்கூட்டம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது