‘நாடாளுமன்றத்தில் பைபிளை வீசவில்லையென அ​மைச்சர் ஜோன்ஸ்டன் அறிக்கை’



கடந்த 16ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலமையின் போது, தான் பைபிளை எடுத்து வீசியதாகக் கூறப்படும் செய்தியில் எவ்வித உண்மையுமில்லையென, கிறிஸ்தவ மத ​அலுவல்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழான எதிர்கட்சியினர் தான் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பரப்பும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானதும் சேறு பூசும் செய்திகள் என்றும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.