திருத்த வேலைகள்



(அப்துல்சலாம் யாசீம்) 

மின் கம்பிகள் மாற்றும் பணிகள் ஆரம்பம்


கிண்ணியாவின்  றகுமானியா பிரதேசத்தின் குடியிருப்புகளுக்கும் எழிலரங்கு மைதானத்திற்கும் மேலாக இலங்கை மின்சார சபையின் அதி சக்தி வாய்ந்த 33000 வோல்டேஜ் மின் கம்பிகள் செல்கின்றது. இதனால் அங்கு வாழும் மக்களும், மைதானத்தை பயன் படுத்தும் வீரர்களும் பெரும் அச்சத்துடனேயே இருந்து வருவதோடு வீடு, கட்டிடங்கள் அமைப்பதிலும் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

மிக நீண்ட காலமாக காணப்பட்ட இந்தப் பிரச்சனை மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு இணங்க அந்த மின் கம்பிகளை அகற்றுவதற்கான முயற்சிகள் கிண்ணியா நகர சபை உறுப்பினர் கௌரவ மஹ்தி அவர்களால் எடுக்கப் பட்டன.

 இக் கம்பிகளை மாற்றியமைப்பதில் இருந்த அனைத்து தடைகளும் கிண்ணியா நகர சபை உறுப்பினர் கௌரவ மஹ்தி அவர்களது தொடர் முயற்சியினால் நீக்கப் பட்டு  மாற்றுப் பாதையினூடாக அந்த கேபிள்களை பொறுத்தும் பணிகள் இன்று ஆரம்பிக்கப் பட்டுள்ளன.  

அதன் நிமித்தம் புதிய கேபிள்களை பொறுத்தும் பாதையில் காணப்படும் பனை மற்றும் தென்னை மரங்களும் வெட்டி அகற்றுப் பட்டன.

அதற்காக சம்பந்தப் பட்ட அனைவருக்கும் பிரதேச வாழ் மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.