5 நீதியரசர்களை நியமிக்க முடியாது



பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக ஏனையவர்களும், தங்களுடைய அந்தப் பதவிநிலைகளை வகிப்பதை நிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவுக்கு எதிராக, மஹிந்த தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை, உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையிலேயே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சார்பில், அவரது சட்டத்தணிகளால் நேற்று (13) தாக்கல் செய்யப்பட்டிருந்த  நகர்த்தல் மனு, உயர் நீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி  செய்யப்பட்டது.
இந்த மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு, மூன்று நீதியரசர்கள் குழு முன்னிலையிலேயே மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாகவும் அறிவித்தது.