தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவர் வி.கே.வெள்ளையனின் நூற்றாண்டு பிறந்ததின நிகழ்வு



(க.கிஷாந்தன்)

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவர் வி.கே.வெள்ளையனின் நூற்றாண்டு பிறந்ததின நிகழ்வு 01.12.2018 அன்று சனிக்கிழமை அட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, நினைவு தீபங்கள் ஏற்றி ஸ்தாபகர் தலைவர் வி.கே. வெள்ளையன் அவர்களின் உருவபடமும் திறந்து வைக்கபட்டதோடு, வி.கே.வெள்ளையனின் மாவலி எனும் சிறப்பிதழ் ஒன்றும் வெளியிட்டு வைக்கபட்டது.

இந் நிகழ்விற்க்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, சோ.ஸ்ரீதரன், எம்.ராம், எம்.உதயகுமார், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் பிலிப், முன்னாள் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் வி.புத்திரசிகாமணி, பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.