#Breaking:மஹிந்தவும், 48 உறுப்பினர்களும் விசாரணை நிறைவு வரை தமது பொறுப்புக்களை வகிப்பதில் இருந்து விலகியிருக்க வேண்டும்



மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது அமைச்சரவை செயற்படுவதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை இரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஸவின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை மீண்டும் எதிர்வரும் ஜனவரி 16, 17, 18 ஆம் திகதிகளில் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், மஹிந்த ராஜபக்ஸவும் எனைய 48 உறுப்பினர்களும் வழக்கு விசாரணை நிறைவு பெறும் வரை தமது பொறுப்புக்களை வகிப்பதில் இருந்து விலகியிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.