பாதை மாறிய பயணம்,கொட்டகலையில்



நாவலப்பிட்டியில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த சரக்கு ரயில் ஒன்று இன்று (03) மாலை 5.45 மணியளவில் தடம் புரண்டுள்ளதனால் மலையகத்துக்கான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளாக, ரயில்வே கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 

கொட்டகலை ரயில் நிலையத்திற்கு அருகாமையிலேயே ரயில் தடம் புரண்டுள்ளது. 

26,630 லீட்டர் எண்ணெய்க் கொள்கலன் ஒன்றை கொட்டகலை எரிபொருள் டிபோவில் நிறுத்துவதற்கு முற்பட்ட சந்தரப்பத்திலேயே ரயில் இவ்வாறு தடம் புரண்டுள்ளது