கடந்த 3 வருடங்களில் இலங்கை அணி பெற்ற முதலாவது வெற்றி



இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் போட்டியில் டக்வெத் லூயிஸ் முறைப்படி இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றியினை பதிவு செய்துள்ளது. 

இப்போட்டி நேற்று எடின்ப்ரோ மைதானத்தில் நடைபெற்றது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன் அடிப்படையில் களம் இறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 322 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

இலங்கை அணி சார்பாக அவிஷ்க 74 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 77 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 66 ஓட்டங்களையும் பெற்றனர்.