பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கம்


நாடு முழுவதும் நேற்றிரவு 9.00 மணி தொடக்கம் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது. 

வட மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டமுமம் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 

நிலவும் அசாதாரண நிலையை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.