புதுக்குளம் கிராமத்தில் வீசியது, புயல்



வவுனியா, ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் கிராமத்தில் வீசிய புயல் காற்றால் ஆலயம் மற்றும் வீடுகள் சேதமடைந்தன. இருவர் காயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்த போது, திடீரென வீசிய காற்றால், வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. பயன்தரு மரங்கள் சரிந்து வீழ்ந்தன.
ஆதி விநாயகர் ஆலயத்தின் கூரையும் தூக்கி வீசப்பட்டது.
குறித்த கிராமத்தில் இடம்பெற்ற இடரில் சிக்கி இருவர் காயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.