வன்முறை சம்பவங்களினால் சேதமடைந்த பள்ளிவாசல்களுக்கு நட்டஈடு



கடந்த தினங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்ட அடிப்படையில் இதுவும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் வன்முறை சம்பவங்களினால் சேதமடைந்த பள்ளிவாசல்களை புனர்நிர்மாணம் செய்வதற்காக இந்த நட்டஈடு வழங்கப்பட உள்ளது. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.