3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா திணறல்
 1. ஒரு ஓவரில் ஒன்பது பந்துகள் வீசிய மார்க் வுட்

  13-வது ஓவரை வீச மார்க் வுட்டை அழைத்தார் இங்கிலாந்து அணித்தலைவர் இயான் மோர்கன்.
  இந்த ஓவரில் 3 பந்துகளை அவர் வைடாக வீசினார்.
  ஆனால் வுட் வீசிய அந்த ஓவரில் மூன்று வைடு மூலமாக இரண்டு ரன்களும் லெக் - பை மூலமாக இரண்டு ரன்களும் கிடைக்க கூடுதலாக இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தது ஆஸ்திரேலியா.
 2. முதல் பவர்பிளேவில் 27 ரன்கள்

  3 விக்கெட் இழப்புக்கு பிறகு ஸ்டீவன் ஸ்மித் - அலெக்ஸ் கரே இணை பவர்பிளேவில் மேற்கொண்டு 13 ரன்கள் சேர்த்துள்ளது.
  ஸ்மித் 25 பந்தில் 4 ரன்கள் எடுத்திருக்கிறார்.
  ஸ்மித்
 3. மூன்று விக்கெட் இழந்தது ஆஸ்திரேலியா

  ஏழு ஓவர்கள் முடிவில் 15 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது ஆஸ்திரேலியா.
  இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ஆர்ச்சர் பந்தில் எல்.பி ஆகி வெளியேறினார். அவர் டக் அவுட் ஆனார்.
  வோக்ஸ் வீசிய மூன்றாவது ஓவரில் வார்னர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
  ஹேண்ட்ஸ்கோம் ஏழாவது ஓவரின் முதல் பந்தில் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை வோக்ஸ் கைப்பற்றினார்.
 4. இன்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள்

  டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), ஸ்டீவன் ஸ்மித்,பீட்டர் ஹான்ஸ்கோம்ப்.மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கரே, பேட் கம்மின்ஸ், மிச்செல் ஸ்டார்க், ஜாசன் பெஹண்டார்ஃப், நாதன் லயான்
 5. இன்று களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள்

  ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ ,ஜோ ரூட், இயான் மார்கன்,பென் ஸ்டாக்ஸ், ஜாஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், லியம் பிளங்கட் , ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித்,மார்க் வுட்.
 6. ஆஸ்திரேலிய அணி

  இரண்டாவது அரையிறுதி போட்டியில் டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியில் ஹான்ஸ்கோம்ப் சேர்க்கபட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை.
  ஆஸ்திரேலியா அணி: டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), ஸ்டீவன் ஸ்மித்,பீட்டர் ஹான்ஸ்கோம்ப்.மார்கச் ஸ்டாய்னிஸ்,க்லென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கரீ, பேட் குயுமின்ஸ், மிட்செல் ஸ்டார்க்,ஜாசன் பெஹண்டிராஃப், , நாதன் லியான்
  Australia Team


Advertisement