கூட்டமைப்புக்கு அரசு இலஞ்சம்


“எம்மால் அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இறுதி நேரத்தில் அரசு வழங்கிய இலஞ்சத்தால் தோல்வியடைந்தது.”
– இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“எம்முடன் எதிரணி வரிசையில் அமர்ந்திருக்கும் மஹிந்த ராஜபக்சவும், இரா.சம்பந்தனும் முறையாகச் செயற்பட்டிருந்தால் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெற்றிருக்கும்.
இறுதி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசால் இலஞ்சம் வழங்கப்பட்டது. கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்துக்குத் தீர்வு வழங்கப்படும் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எழுத்துமூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுதியளித்தார்.
இதையடுத்துப் பிரேரணைக்கு ஆதரவாக ஏற்கனவே வாக்களிக்கத் தீர்மானித்திருந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இறுதியில் பிரேரணையை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்” – என்றார்.