‘ஆசிரியர், அதிபர் சேவையின் நீண்டகால பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன’

ஆசிரியர், அதிபர் சேவையில் மிக நீண்ட காலமாகக் காணப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க தனது தலைமையின் கீழ் முடிந்துள்ளதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கல்வித் துறையை அதிகம் செயற்படுத்திச் செல்வதற்காக, அதிபர்கள், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, பங்களிப்பு சாதாரணமானதொன்றல்ல என்றும் சகல தொழில்களையும் உருவாக்கக் கூடிய ஒரேயொரு தொழில் ஆசிரியர் தொழில்  என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தான் 2015ஆம் ஆண்டு கல்வி அமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்னரான 10 வருட காலப்பகுதிக்குள், கல்வி அமைச்சர்களாகப் பதவி வகித்தவர்களால் ஆசிரியர், அதிபர் சேவையில் காணப்பட்ட பிரச்சினைகளை அடையாளங்காண முடியாமல் போனதாகவும் அமைச்சர் அகிலவிராஜ் தெரிவித்துள்ளார்.


Advertisement