'மின் தடை ஏற்படாது’

இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குவதற்கு, எரிபொருள் கூட்டுதாபனம் இணங்கியுள்ளதால், மின் தடை ஏற்படாதென, மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்  இலங்கை மின்சார சபையின் அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருளை வழங்கும் நடவடிக்கை, எரிபொருள் கூட்டுதாபனத்தால் இடைநிறுத்தப்பட்டது. இதனால்  நாட்டின் பல பிரதேசங்களில் மின்தடை ஏற்பட்டிருந்தது.
மின் தடை தொடர்பில், மின்சக்தி அமைச்சு, நிதியமைச்சுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஊடாக, எரிபொருள் கூட்டுதாபனத்துக்கு இலங்கை மின்சார சபை செலுத்தவுள்ள நிதியை விரைவாக செலுத்தவும் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட வேண்டிய எரிபொருளை வழங்குவதற்கும் இணக்கபாடு எட்டப்பட்டுள்ளது.


Advertisement