யாழ் சர்வதேச விமான நிலையத்தில், இந்திய விமானம் தரையிறங்கியது

இந்தியாவின் முதலாவது விமானம் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சற்று முன் வந்திறங்கியுள்ளது.

இந்திய தொழிநுட்ப அதிகாாிகள் குழுவுடன் இந்தியாவின் எயார் இந்திய அலைன்ஸ் விமானம் ஒன்று இன்று (15) யாழ். பலாலி விமான நிலையத்தில் தரை இறங்கியுள்ளது.

குறித்த விமானத்தில் வருகை தந்த இந்திய அதிகாரிகள் பலாலி ஓடுபாதை பரிசோதனை, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராயவுள்ளனர்.