2019 இணையத்தில்>18.8 கோடி இ-மெயில்கள், 10 லட்சம் FB லொகின்கள்


`Every Second Counts' என்றொரு ஆங்கிலப் பொதுமொழி உண்டு. ஆம்! இன்டர்நெட் மூலம் உலகம் மிக வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிற காரணத்தால் ஒவ்வொரு நொடியும் கணக்கில் கொள்ளப்பட வேண்டியதுதான். ஆடை, உணவு, புத்தகங்கள், திரைப்படம் என எல்லாவற்றையும் நம் விரல் நுனியில் கொண்டு வந்துவிட்டது இன்டர்நெட். அப்படியான சக்திகொண்ட இன்டர்நெட்டில், உலகம் முழுவதும், 2019-ம் ஆண்டில் ஒவ்வொரு 60 நொடிகளுக்குள்ளாகவும் என்ன நடந்தது என்பது பற்றிய டேட்டாவை வெளியிட்டுள்ளது Lorilewismedia என்ற இணையதளம்.
இன்ஸ்டாகிராமில் ஒரு நிமிடத்துக்கு 3,47,222 முறை ஸ்க்ரால் செய்யப்பட்டுள்ளன.
Lorilewismedia Data - 2019
அந்த இணையதளம் வெளியிட்டுள்ள டேட்டாவில், ஒரு நிமிடத்துக்கு 38 லட்சம் கூகுள் சர்ச்கள் செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு 1 லட்சம் சர்ச்கள் அதிகமாகியுள்ளன. மேலும், உலகம் முழுவதும் ஒரு நிமிடத்துக்கு நெட்ஃபிளிக்ஸில் 6,94,444 மணி நேரத்துக்கான வீடியோக்கள் பார்வையிடப்படுகின்றன. கடந்த ஆண்டு ஒரு நிமிடத்துக்கு 67 ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டன. ஆனால், அதுவே இந்த ஆண்டு 180 ஸ்மார்ட் ஸ்பீக்கர்களாக (அமேசான் எக்கோ மற்றும் கூகுள் ஹோம்) அதிகரித்துள்ளது.

ஒரு நிமிடத்தில் 45 லட்சம் யூடியூப் வ்யூஸ் கிடைக்கின்றன.
வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மெசேஞ்சர் எனத் தகவல் பரிமாற்றத்துக்கான பல அப்டேட்டட் ஆப்கள் இருந்தாலும் இ-மெயில் மூலம்தான் அதிக தகவல்கள் அனுப்பப்படுகின்றன. வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் மெசேஞ்சர் மூலம் ஒரு நிமிடத்துக்கு 4.16 கோடி மெசேஜ்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. அதுவே ஒரு நிமிடத்துக்கு இ-மெயில் மூலம் 18.8 கோடி மெயில்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.
வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மெசேஞ்சர், இமெயில் எனப் பல தகவல் பரிமாற்ற ஆப்கள் இருந்தும், 60 நொடிகளில் 1.81 கோடி டெக்ஸ்ட் மெசேஜ்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆச்சர்யப்பட வேண்டாம், இதில் 80 சதவிகித மெசேஜ்கள் ஏதேனும் ஒரு நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்டவைதான்.

மேலும், 2019-ம் ஆண்டில் உலகம் முழுவதும் ஒரு நிமிடத்துக்குள் இன்டர்நெட்டில் என்னவெல்லாம் நடந்தன என்பதைக் கீழுள்ள இன்ஃபோகிராபிக்ஸைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்...Advertisement