இந்தியாவை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்

இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று சென்னையில் நடந்தது.
முதலில் பேட் செய்த இந்தியா 8 விக்கெட்டுகள் இழந்து 287 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு விக்கெட்டுகள் இழந்து 291 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதையடுத்து, களமிறங்கிய இந்தியா அணி, 50 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்கத்தில் மேற்கு இந்தியத்தீவுகளின் பந்துவீச்சில் தடுமாறிய இந்திய அணி வீரர்கள் 100 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகள் இழந்தனர்.
பின்னர் களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் நிதானமாக விளையாடி அணிக்கு ரன் சேர்ந்தனர்.
இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 71 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 70 எடுத்து ஆட்டமிழந்தனர். கேதர் ஜாதவ் 40 ரன்னும், ரோகித் சர்மா 36 ரன்னும் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் சார்பில் காட்ரல், கீமோ பால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், பொல்லார்டு ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது மேற்கு இந்தியத் தீவுகள்.

2 ஆண்டுகளுக்கு சென்னையில் நடக்கும் போட்டி

IND Vs WI: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு 289 ரன்கள் நிர்ணயித்தது இந்தியாபடத்தின் காப்புரிமைBCCI
இரண்டு வருடம் கழித்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஒருநாள் போட்டி நடக்கிறது. இதற்கு முன்பு 2017ல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான ஒருநாள் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெற்றது.
அந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. ஐந்து ஒருநாள் போட்டிகளைக் கொண்ட அந்த தொடரில் முதல் போட்டியில் இந்தியா டக்வொர்த் லூயிஸ் முறையில் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சற்று நிதானமாக விளையாட முடியும் என்றாலும், இரண்டு நாட்களாக அங்கு மழை பெய்து வருகிறது. ஆனால் வானிலை மையத்தின் அறிவிப்புபடி ஞாயிறன்று மழைபெய்யும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
இன்று நடைபெற உள்ள போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கேதர் ஜாதவ், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், குல்தீப் யாத்வ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் விளையாடுகின்றனர்.
கிரண் பொல்லார்டு தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் ஷாய் ஹோப், சுனில் அம்பரீஷ், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், ஜேஸன் ஹோல்டர், கீமோ பால், வோல்சு, அல்சாரி ஜோசப், ஷெல்டன் காட்ரல் ஆகியோர் விளையாடுகின்றனர்.
இதற்கு அடுத்த இரண்டு ஒருநாள் போட்டி டிசம்பர் 18 விசாகப்பட்டினத்திலும் மற்றும் டிசம்பர் 22 கட்டாகிலும் நடைப்பெறவுள்ளது.
இரண்டு ஆண்டுகள் கழித்து ஒருநாள் போட்டி சென்னையில் நடப்பதால் சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.


Advertisement