சம்பிக்கவின் கைது பாராளுமன்ற பாரம்பரியங்களை மீறும் செயல்


பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் கைதானது கவலையளிப்பதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த கைதானது பாராளுமன்ற உறுப்பினர்களை கைதுசெய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய பராம்பரியங்களையும், சிறப்புரிமைகளையும் மீறியுள்ளதாகவும் சபாநாயகர் கருஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்வதற்கு முன்பதாக அதுகுறித்து சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் சம்பிக்க ரணவக்கவின் இல்லத்திற்குள் நுழைந்த பின்னரே பிரதி சபாநாயகருக்கு இவ்விடயம் தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்டதாகவும் சாபாநயாகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சமல் ராஜபக்ஷ சபாநாயகராகவிருந்த காலத்தில் பாராம்பரியங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் முறைப்படி பின்பற்றப்பட்டதாகவும், அதனை தானும் பின் பற்றி வருவதாகவும் சபாநாயகர் கருஜயசூரிய இதன்போது மேலும் தெரிவித்தார்

Post a Comment

[facebook][blogger]

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.