போராடுகின்றது இலங்கை, மிரட்டுகின்றது பாகிஸ்தான்


பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இலங்கை அணி இன்னும் 308 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது. 
இன்றைய நான்காம் நாள் ஆட்டம் இடம்பெற்றுவரும் நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, சற்று முன்னர் வரை 5 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 
முன்னதாக, தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 3 விக்கெட்டுக்களை இழந்து 555 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. 
தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி  191 ஓட்டங்களையும், இலங்கை அணி 271 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது. 
இலங்கை அணிக்கு இன்னும் 5 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் ஆட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.