புலமைப் பரிசில் அறிவித்தல்


 விண்ணப்ப முடிவுத் திகதி - 30.04.2020
📌 வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கான இலங்கை அரசின் புலமைப் பரிசில் - 2020 க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தகைமைகள்

அ) 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில்

1) குறிப்பிட்ட விண்ணப்பதாரரின் தாய்/தந்தை 2014.08.04 ஆம் திகதியிலிருந்து 2019.08.04 ஆம் திகதி வரையில் இவ் இடைப்பட்ட காலப்பகுதியில் பணியகத்தில் பதிவுசெய்திருத்தல்.

2) 2019 ஆம் ஆண்டு 5 ஆம் ஆண்டு புலமைப் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளியில் சித்தியடைந்து இருத்தல்.

ஆ) க.பொ.த (சா/த) புலமைப்பரிசில்

1) குறிப்பிட்ட விண்ணப்பதாரரின் தாய்/தந்தை 2013.12.03 ஆம் திகதியிலிருந்து 2018.12.03 ஆம் திகதி வரையில் இவ் இடைப்பட்ட காலப்பகுதியில் பணியகத்தில் பதிவுசெய்திருத்தல்.

2) 2018 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சையில் குறைந்தபட்சம் கணிதம்,  உள்ளிட்ட 06 பாடங்களில் சித்தி பெற்று அதில் 03 பாடங்களில் திறமைச்சித்தியுடன் சித்தியடைந்து க.பொ.த (உயர் தரம்) கற்பவராக இருத்தல்.

இ) உயர் கல்வி புலமைப்பரிசில்

1) குறிப்பிட்ட விண்ணப்பதாரரின் தாய்/தந்தை 2013.08.06 ஆம் திகதியிலிருந்து 2018.08.06 ஆம் திகதி வரையில் இவ் இடைப்பட்ட காலப்பகுதியில் பணியகத்தில் பதிவு செய்திருத்தல்.

2) 2018 ஆம் ஆண்டு உயர் தரப்பரீட்சையில் சித்தியடைந்து தற்போது அரச பல்கழைக்கழகம் ஒன்றில் முழுநேர உள்வாரி பட்டப்படிப்பு முதல் வருடத்தில் கற்பவராக இருத்தல்.

 முழுமையான விபரங்களுக்கு - slbfe.lk