சிரேஸ்ட சட்டத்தரணி விவேகானந்தன் அவர்களுக்கு அஞ்சலிகள்


#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
சட்டத்தொழிலை கனவான்கள் தொழிலாக மதித்து,தொழில் புரிந்த சிரேஸ்ட சட்டத்தரணி செல்லப்பா விவேகானந்தன் அவர்கட்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். அவரது பிரிவால் துயருறும் குடும்ப அங்கத்தவர்களின் பிரிவுத் துயரில் அடியேனும் பங்கெடு்க்கின்றேன்.


யாழ். மிருசுவில் விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் கிழக்கை வதிவிடமாகவும், கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா விவேகானந்தன் அவர்கள் 13-01-2020 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரம்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானபூசணி அவர்களின் அன்புக் கணவரும்,

புவிதரன்(ஜனாதிபதி சட்டத்தரணி -கொழும்பு), விவேதரன்(நோர்வே), இந்துமதி(கனடா), வளர்மதி(நோர்வே), கோமதி(கனடா), சசிதரன்(சட்டத்தரணி- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரகி(கொழும்பு), மீரா(நோர்வே), கணேசமூர்த்தி(கனடா), செல்வசிறி(நோர்வே), திலீபன்(கனடா), ராஜபாலினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சரவணமுத்து, செல்வரட்ணம், அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

வளவன், கல்கி, ஹாரணி, விதுஷன், நிவேதிதா, கீர்த்திகா, சந்தியா, சரணியா, திவ்யன், நித்தியன், அபிராமி, வர்ஷினி ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-01-2020 செவ்வாய்க்கிழமை, 15-01-2020 புதன்கிழமை ஆகிய தினங்களில் மு.ப 10:00 மணிதொடக்கம் பி.ப 08:00 மணிவரை பொறளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு  பின்னர் 16-01-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் கிரியைகள் நடைபெற்று  அதனை தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில் பொறளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.