#சட்டத்தரணி ஏ.ஏம்.ஜெனீர்.
இலங்கையின பிரதம நீதியரசரின் அறிவுறுத்தலுக்கு அமைய, இவ்வாரத்திற்குரிய வழக்குகள் நாளை துவக்கம் 20 ந்தகதி வரையுள்ளவை (17-20) எதிர்வரும், ஏப்ரில் மாதம் முதல் வாரத்தில் அழைப்பதற்கான நடவடிக்கைகள இலங்கை மீயுயர் நீதிமன்றம் ஏனைய மன்றங்களுக்கும், சட்டத்தரணிகளுக்கும் பொது மக்களுக்கும் தெரிவித்துக் கொள்வதாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இதே வேளை மிக முக்கியமான அவசரமானதும் அவசியமானதுமான விடயங்கள் தொடர்பிலான வழக்குகள் , மாத்திரம் வரையறை மட்டுப்பாட்டுக்குள் கேட்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பொது மக்கள் எவரும் நீதிமன்ற வளாகத்தினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேவையெனெக் கருதும் பட்சத்தில், சட்டத்தரணியின் வேண்டுதலின் பேரில் மாத்திரம் செல்லலாம்.


Post a Comment
Post a Comment