யாழ். மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (தமிழ் தேசியக் கூட்டமைப்பின்) சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கப்படுகிறார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான வேட்பு மனு தயாரிக்கும் பணி யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையக பணிமனையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகியது.
தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில் இடம்பெறும் இந்த நடவடிக்கையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், வேட்பாளராக இணைக்கப்பட்டுள்ளார்.
தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், கஜதீபன், கு.சுரேன், திருமதி சசிகலா ரவிராஜ், இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் தபேந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக வேட்புமனுவில் கையொப்பமிட்டனர்.
அத்துடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தேசியப் பட்டியலில் இடமளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


Post a Comment
Post a Comment