இலங்கைக்கு கொரோனா தொற்றானது, இத்தாலியின் ஊடாகவே தொற்றியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றினால் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட இலங்கையர், இத்தாலி நாட்டு பிரஜைகளுடன் சுற்றுலா சென்றிருந்த நிலையிலேயே அவருக்கு இந்த தொற்று ஏற்பட்டிருந்தது.
சுற்றுலா வழிக்காட்டியாக செயற்பட்ட குறித்த நபருக்கும், அவருடன் பழகிய மற்றுமொரு நபருக்கும் முதலில் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
அதுமாத்திரமன்றி, இத்தாலியிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த பலருக்கு இந்த வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில், இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகைத் தருவோரை 14 நாட்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
குறித்த நடவடிக்கையை கடந்த முதலாம் தேதி ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்த நிலையில், மருத்துவ கண்காணிப்பிற்காக வத்தளை பகுதியிலுள்ள மருத்துவமனையொன்று தயார்ப்படுத்தப்பட்டது.

எனினும், தமது பிரதேசத்தில் இவ்வாறான மருத்துவ கண்காணிப்பு நிலையமொன்று கொண்டு வரப்படுவதானது, அபாயகரமானது என பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், குறித்த மருத்துவ கண்காணிப்பு நிலையத்தை கந்தகாடு பகுதிக்கு மாற்ற அரசாங்கம் தீர்மானித்தது.
இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க சுமார் 10 நாட்கள் தாமதமாகிய பின்னணியில், மார்ச் மாதம் 10ஆம் தேதியே முதலாவது பிரிவினர் மருத்துவ கண்காணிப்புக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
எனினும், அரசாங்கம் திட்டமிட்ட காலத்தில் இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகைத் தந்த பலர் மருத்துவ கண்காணிப்புக்களை மேற்கொள்ளாது, தமது சொந்த ஊருக்கு சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இத்தாலியில் வசிக்கும் பெரும்பாலானோர் புத்தளம் மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
புத்தளம் மற்றும் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த சுமார் 800ற்கும் அதிகமானனோர் கடந்த முதலாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை இலங்கைக்கு வருகைத் தந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிக்கின்றார்.

அவ்வாறு வருகைத் தந்தவர்களை சுய மருத்துவ கண்காணிப்புக்கு ஈடுபடுத்திக் கொள்ளுமாறு அரசாங்கம் கோரியிருந்த போதிலும், அவர்கள் அதனை பொருட்படுத்தாது நாட்டின் பல பகுதிகளுக்கும் நடமாடி வருவதாக போலீஸார் கூறுகின்றனர்.
இந்த நிலையிலேயே, குறித்த நபர்களிடமிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு இந்த வைரஸ் தொற்று பரவாதிருப்பதை நோக்கமாக கொண்டு போலீஸார் இன்று இந்த தீர்மானத்தை எட்டியுள்ளனர்


Post a Comment
Post a Comment