(க.கிஷாந்தன்)
'கொவிட் - 19' என பெயரிடப்பட்டுள்ள 'கொரோனா' வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தால் பொது விடுமறை வழங்கப்பட்டுள்ள 16.03.2020 அன்றைய நாளில் அட்டன் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.
வழமையாக கிழமை நாட்களில் அட்டன் நகரம் பரபரப்பாக இயங்கும். மக்கள் கூட்டமும் அலைமோதும்.
குறிப்பாக காலை 6 மணிமுதல் 9 மணிவரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் அட்டன் பேருந்து நிலையம், தொடரூந்து நிலையம் ஆகியவற்றில் இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவே ஆள் நடமாட்டம் இருந்ததை காணமுடிந்தது.
பிரதான வீதிகளிலும் ஆள்நடமாட்டம் இருக்கவில்லை என்பதுடன் ஆடை விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
அதேவேளை, மலையகத்தில் மேலும் சில நகரங்களிலும் இதே நிலைமை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment
Post a Comment