முஸ்லிம் சமூகத்தை பலவீனப்படுத்தும் #மையீர்கதை





யாரோ ஒரு மக்கா இமாம்  கனவு கன்டாராம் குர்ஆனில்  இமை முடி உள்ளதாம்.  அந்த இமை முடியை எடுத்து நீரில் ஊறவைத்து  அதைக்குடித்தால்  #கொரோனா நோய் இல்லாமல் போய்விடுமாம் என்ற புதியதோர் கட்டுக்கதை இன்று இலங்கை முஸ்லிம் சமுகத்தில் தீவிரமாக பரவி வருகிறது.

இது சம்மந்தமாக  என்னிடம் பலர் தொடர்பு கொண்டு கேட்டார்கள் இன்னும் சிலர் வீடு தேடிவந்து கேட்டார்கள். இதன் நிலைப்பாடுதான் என்ன? இதன் உண்மைத்தன்மைதான் என்ன?
இதை நீங்கள் நம்பாவிட்டால் நீங்கள் ஈமான் கொள்ளவில்லை என்று சிலர் எங்களிடம் கூறுகின்றார்கள் என்று கவலையோடு சொன்னார்கள்.

இந்த விடையம்  உன்மைக்குப் புறம்பானது காரணம் இது சம்பந்தமாக  எந்தவிதமான செய்திகளும் வெளிவரவில்லை. இது பாரவலாக பேசப்படும் விடையமாக இருந்தால் குறைந்தது செய்திகளிலாவது அல்லது அரபு செய்தித்தளத்திலாவது வந்திருக்க வேண்டும் அதில் கூட வெளிவரவில்லை.
இந்த செய்தியை சொன்னவரிடமாவது நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள் என்றால் அவர்கூட இன்னவர் சொன்னார் என்று மற்றவரை ஆதாரமாக காட்டுகின்றார்கள்.

குர்ஆனில் இருக்கும் இமையின் முடியை நீரில் ஊறவைத்து குடித்தால் கொரோனா நோய் போய்விடும் என்பது புத்திக்குப் படாத விடையம். அல்லாஹ் குர்ஆனைத்தான் நோய் நிவாரனி என்று சொல்கின்றானேதவிர குர்ஆனில் உள்ள முடியை அல்ல . நாங்கள் ஒன்றை நன்றாக விளங்க வேண்டும்  குர்ஆன்பிரதிகள் வானத்தில்  பிரின்ட் செய்யப்பட்டவையல்ல மாறாக மனிதன் அசிட்ட ஒன்று . அன்றாடம் அதைத் தொடுகின்றபோது அதில் முடிவிழுவதென்பது சாதாரணமான விடையம். இதை வைத்துக்கொண்டு இது ஈமானின் அம்சம் என்பது மடத்தனமான விடையம்.

அல்லாஹ்  சூறதுல் ஹுஜராத்தில் கூறுகின்றான் உங்களிடம் ஒருவர் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால் அந்த செய்தியை ஊர்ஜிதம் செய்துகொள்ளுங்கள் என்று சொல்கின்றான் இந்த நிதானத்தைக்கூட எமது சமுகம் இழந்துவிட்டது. அல்லாஹ்  எம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும். 

கட்டுரை
அஷ்ஷெய் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி)
பிரதம ஆசிரியர்  தலைவாசல் சஞ்சிகை.