அலறி மாளிகைக் கூட்டத்தில், ஆறுமுகனின் வகிபாகம் என்ன?



அலரிமாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழர்கள் சார்பில் ஆறுமுகன் தொண்டமான் மாத்திரமே கலந்துக்கொண்டுள்ளார். மலையக மக்கள் குறித்து எந்தவித கருத்துக்களையும் அவர் வெளியிடவில்லை என அறிய முடிகின்றது.

கொழும்பில் சிக்குண்டுள்ள மலையக தமிழ் இளைஞர்களை கட்டம் கட்டமாக சொந்த பகுதிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அலரிமாளிகை கூட்டத்தில் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார். இதற்கு தொண்டமான் பதிலளிக்கவில்லை என அறிய முடிகின்றது.