தளர்த்தப்பட்ட முடக்கநிலை - ஐரோப்பாவின் சமீபத்திய நிலவரம் என்ன?





கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழகம் முதல் அமெரிக்கா வரை உலகின் அனைத்து பகுதிகளிலும் நடக்கும் செய்திகளை ஒளி, ஒலி, வரைகலை மற்றும் எழுத்து வடிவத்தில் இந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

முக்கிய சாராம்சம்
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் 11 லட்சத்து 57 ஆயிரத்து 753 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ள நிலையில், ஓரிரு வாரங்களாக அங்கு தினசரி ஏற்படும் உயிரிழப்பு குறைந்து வருகின்றன.
சில முக்கிய விமான சேவை நிறுவனங்கள், பயணிகள் முக கவசம் அணிவதை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 203 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது