தேர்தலை நிறுத்தக் கோரி மீஉயர் மன்றில் மனுத் தாக்கல்



இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலை, இம் மாதம் 20ந் திகதி, நடத்துவதற்கு தேர்தல் ஆணையரால் தினம் அறிவிக்கப்பட்டதானது அடிப்படை உரிமையினை மீறும் செயலென்றும், இதனை உடன் நிறுத்துமாறு கோரியும் இலங்கையின் மீ உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

சட்டத்தரணி சரித்த குணரத்தவினால்,தேர்தல்கள் ஆணையகத்தினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, தேர்தல்கள் ஆணையகத் தவிசாளர், மற்றும், குழு அங்கத்தவர்களுக்கு எதிலாக இந்த அடிப்படை  மனித உரிமை வழக்குத் தாக்கல் செயயப்பட்டுள்ளது.