பொகவந்தலாவையில், குளவிக் கொட்டு

(க.கிஷாந்தன்)

 

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லின்போட், பிரிட்லேன்ட், கொட்டியாகலை ஆகிய தோட்ட பகுதிகளில் குளவிகளின் தாக்குதலுக்குள்ளாகி ஐந்து பேர் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார். இச்சம்பவம் 17.06.2020 அன்று இடம்பெற்றுள்ளது.

 

தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த போது மரத்தில் கட்டியிருந்த குளவிகள் திடீரென களைந்து தாக்கியுள்ளன.

 

பறவை ஒன்று தேன் குடிப்பதற்காக குளவி கூட்டினை தாக்கியதால் களைந்த குளவிகள் தொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில்  ஒரு பெண்ணும், இரு ஆண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதோடு, மேலும் இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.Advertisement