நபரொருவர் படுகாயம்

(க.கிஷாந்தன்)

 

அட்டன்  - கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு பகுதியில் இன்று (24.06.2020) மாலை கனரக டிப்பரொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

 

மோட்டார் சைக்களில் பயணித்த 76 வயதுடைய நபரொருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து நோயாளர் காவு வண்டி ஊடாக அவர் உடனடியாக டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

நுவரெலியாவில் இருந்து அட்டன் ஊடாக, நோட்டன்பிரிட்ஜ் பகுதிக்கு பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

 

" முன்னால் சென்ற வாகனமொன்று வலது பக்கம் திரும்புவதற்கான சமிக்ஞையை விடுத்ததால் நான் மோட்டார் சைக்களில் வேகத்தை குறைத்தேன். அப்போதே பின்னால் வந்த டிப்பர் மோதியது." -என்று மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற பெண் தெரிவித்தார்.

 

குறித்த பெண்ணின் தந்தையே படுகாயமடைந்துள்ளார். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement