இன்றைய அரச வர்த்தமானியில்


இலங்கை பொது நிருவாக அமைச்சினால் இலங்கை நூலகர் சேவை தரம் -III திறந்த போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

#பொதுவான தகைமைகள்

(A) இலங்கைப் பிரஜையாக இருத்தல்

(B) விண்ணப்ப முடிவுத்திகதியில் 18 வயதுக்கும் 30 வயதுக்கும் உட்பட்டவராக இருத்தல்.

(C) சிறந்த நன்நடத்தையுடையவராக இருத்தல்

(D) கல்வித்தகைமைகள்

(1) கல்விப் பொது தராதர சாதாரண தரப்பரீட்சையில் ஒரே தடவையில் சிங்களம் / தமிழ் / ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட 04 நான்கு பாடங்களில் திறமைச்சித்தியுடன் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்,

மற்றும்

(2) கல்விப்பொது தராதர உயர்தர பரீட்சையில் சகல பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் (பொது வினாத்தாள் மற்றும் பொது ஆங்கிலம் தவிர)

(E) தொழிற்தகைமைகள்

1. இலங்கை பல்கைலக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்ககழகத்தில் 3 வருட டிள்ளோமா நூலக விஞ்ஞான கற்கை

அல்லது

2. இலங்கை நூலகர் சங்கத்தில் 3 வருட டிள்ளோமா நூலக விஞ்ஞான கற்கை

போட்டிப்பரீட்சை விபரங்கள்

1. நுலக விஞ்ஞானம் - 03 மணித்தியாலங்கள்
2. நுண்ணறிவு - 01  மணித்தியாலம்
3. பொது அறிவு - 01  மணித்தியாலம்

#பரீட்சைக் கட்டணம் - 600 ரூபாய்கள்


Advertisement