டிவிட்டர் கணக்ககள் ஹேக் செய்யப்பட்டன


அமெரிக்க பில்லினியர்களான எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், பில் கேட்ஸ் ஆகியோரின் டிவிட்டர் கணக்குகளும், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் டிவிட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டன.

`பிட்காய்ன் ஸ்கேம்` என்று அழைக்கப்படும் இந்த ஹேக் சம்பவத்தில் ஹேக் செய்யப்பட்ட டிவிட்டர் கணக்குகளிலிருந்து 'பிட்காயின்' எனப்படும் கிரிப்டோ கரன்சிகளை நன்கொடைகள் அனுப்புமாறு கோரப்பட்டது.

"எல்லாரும் என்னை பணம் வழங்க சொல்லி கேட்கிறார்கள். அதற்கான நேரம் வந்துவிட்டது. நீங்கள் ஆயிரம் டாலர்கள் அனுப்பினால் நான் உங்களுக்கு 2000 டாலர்கள் திரும்பி அனுப்புகிறேன்" என பில்கேட்ஸ் கணக்கிலிருந்து ட்வீட் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ட்வீட்டுகள் பதியப்பட்ட சில நிமிடங்களில் அழிக்கப்பட்டன.

இதற்கு பதில் நடவடிக்கையாக `வெரிஃவைட்` கணக்குகள் எனப்படும் நீல நிற டிக்குகள் கொண்ட கணக்குகள் பலவற்றை ட்வீட் செய்யவிடாமல் நிறுத்தியது டிவிட்டர் நிறுவனம்.

கடவுச்சொல்லை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஹேக் செய்யப்பட்ட பல டிவிட்டர் கணக்குகளால் தற்போது ட்வீட் செய்யமுடியும் எனவும் ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக தாங்கள் பணியாற்றி வருவதாகவும் டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Skip Twitter post, 1

End of Twitter post, 1

இந்த ஹேக் செய்யப்பட்ட கணக்குகளில் பதியப்பட்ட ட்வீட்டுகள் காரணமாக சில நிமிடங்களில் ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நன்கொடைகள் செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த டிவிட்டர் கணக்குகள் மில்லியன் கணக்கான பின்தொடர்வோரைக் கொண்டுள்ளவை.