கொரோனா தடுப்பூசி: "10 கோடி பேருக்கு 225 ரூபாயில் கிடைக்கும்"


 

225 ரூபாய்க்கு விற்கும் வகையில் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டவுடன் அதை 10 கோடி டோஸ் தயாரித்து இந்தியாவுக்கும் மற்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கும் வழங்குவதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் சீரம் மையம் ஒப்பந்தம் போட்டுள்ளன என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக சீரம் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"225 ரூபாய்க்கு கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டவுடன் அதை 10 கோடி எண்ணிக்கையில் தயாரித்து இந்தியாவுக்கும் மற்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கும் வழங்குவதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் சீரம் மையம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Banner

ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 92 நாடுகளுக்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் நோக்கில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அந்நாடுகளுக்குத் தடுப்பு மருந்தை தயாரித்து வழங்குவதற்காக சீரம் மையத்துக்கு ரூ.1,125 கோடியை அந்த அறக்கட்டளை வழங்கவுள்ளது.

அஸ்த்ரா ஜெனிகா, நோவாவேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகள் பரிசோதனை நிலையை எட்டியுள்ளன. அவற்றை சீரம் மையத்தில் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.