20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை


 


20ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபிற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற வேண்டும் என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.


எனினும், இதற்கு பொதுமக்களின் அபிப்பிராயத்தை பெற வேண்டிய அவசியம் இல்லை எனவும் சட்ட மா அதிபர் பரிந்துரைத்துள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.