ஹாசிம் அம்லாவை பயங்கரவாதி என்றும் வருணணை செய்த டீன் ஜோன்ஸ் மறைவு





டீன் மெர்வின் ஜோன்ஸ் AM (Dean Mervyn Jones பிறப்பு: மார்ச் 24, 1961) ஓர் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆவார்.இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். வலதுகை நேர்ச் சுழல் வீச்சாளரான இவர் 52 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 3631 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக 216 ஓட்டங்களை எடுத்துள்ளார்.


 பந்துவீச்சில் 1 இழப்பினைக் கைப்பற்றியுள்ளார்.இவரது பந்துவீச்சு சராசரி 64.00 ஆகும். 164 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 6068 ஓட்டங்களை 44.61 எனும் சராசரியில் எடுத்துள்ள இவரது அதிகபட்ச ஓட்டம் 165 எடுத்தது ஆகும். பந்துவீச்சில் 3 இழப்புகளைக் கைப்பற்றியுள்ளார். இவரது பந்துவீச்சு சராசரி 27.00 ஆகும். மேலும் இவர் 245 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 19188 ஓட்டங்களையும் , 285 பட்டியல் அ போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தேர் வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த மட்டையாளராகவும் சிறந்த களத் தடுப்பாளராகவும் இவர் பரவலாக அறியப்படுகிறார். 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களின் முற்பகுதியிலும் அவர் உலகின் சிறந்த ஒருநாள் மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். 2019 ஆம் ஆண்டில் ஜோன்ஸ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார் . [1]


சர்வதேச வாழ்க்கை

கிரஹாம் யல்லோப் காயம் காரணமாக நாடு திரும்ப வேண்டியதையடுத்து 1984 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ஜோன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் விளையாடும் பதினொரு பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப்படவில்லை, ஆனால் ஸ்டீவ் ஸ்மித் உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர் தேர்வானார். இந்தப் போட்டிக்கு முன்பு நல்ல உடல்நலத்தில் இல்லாது இருந்த போதும் தனது அறிமுகப் போட்டியில் இவர் 48 ஓட்டங்களை எடுத்தார். இதுவே தனது சிறந்த போட்டி என இவர் குறிப்ப்பிட்டார். [2] 1984 மற்றும் 1992 க்கு இடையில், ஜோன்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக 52 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். இதில் 11 நூறுகளை எடுத்துள்ளார்.


பயிற்சியாளராக துடுப்பாட்ட வாழ்க்கை

பிப்ரவரி 2016 இல், பாக்கித்தான் சூப்பர் லீக்கில் 2016 இல் ஜோன்ஸ் இஸ்லாமாபாத் யுனைடெட் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். இவரின் தலைமையிலான இந்த அணி பிப்ரவரி 2016 இல் முதல் பாக்கித்தான் சூப்பர் லீக்கில்பட்டத்தை வென்றனர்.


அக்டோபர் 2017 இல், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) ஹாங்காங் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் கண்டங்களுக்கு இடையிலான கோப்பைப் போட்டிக்கான இடைக்கால தலைமை பயிற்சியாளராக டீன் ஜோன்ஸை நியமித்தது. 


மார்ச் 2018 இல், ஜோன்ஸ் மூன்றாவது பாக்கித்தான் சூப்பர் லீக் பருவத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் துடுப்பாட்ட அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். மார்ச் 2018 இல் அவர்கள் இரண்டாவது முறையாக பாக்கித்தான் சூப்பர் லீக் பட்டத்தை வென்றனர். 


பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 5 வது பதிப்பிற்கு மிக்கி ஆர்தருக்கு பதிலாக ஜோன்ஸ் 2019 நவம்பரில் கராச்சி கிங்ஸ் துடுப்பாட்ட அணியின் தலைமை பயிற்சியாளராக ஆனார்.


இலங்கை அணிக்கெதிராக தென் ஆபிரிக்கா அணி விளையாடிய தருணத்தில், ஹாசிம் அம்லாவை பயங்கரவாதி என வருணித்ததால், சர்வதேசப் போட்டிகளில் இருந்து நிறுத்தப்பட்டார். 


இறுதியாக இந்திய நிறுவனமொன்றிக்காக இவர் வருணணையாளராகப் பணியாற்ற தருணம் இன்றைய தினம் மாரடைபபால் மரணித்தார்.