அக்கரைப்பற்று முதல்வர்,ஆலையடிவேம்பு தவிசாளர் ஆகியோருக்கான கட்டளை விரைவில்


 
#SM.இர்சாத்.
அக்கரைப்பற்று மாநகர மேயர், ஆணையாளர், RDA பிரதம பொறியிலாளர், ஆலையடிவேம்பு தவிசாளர், செயலாளர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு அக்கரைப்பற்று பொலிஸார்  பொதுத் தொல்லைச் சட்டத்தின் கீழ் அண்மையில், வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். 

அக்கரைப்பற்று நீதிமன்ற நியாயாதிக்கத்திற்குட்பட்ட பகுதியில் விபத்துக்கள் அதிகம் இடம்பெறுவதற்கு பிரதான பாதையில் வாகனங்கள் நிறுத்துவதும், மற்றும் வாகனங்களை நிறுத்தி வியாபாரம் செய்வதற்கான அனுமதியும் அக்கரைப்பற்று மநாகர சபை, ஆலையடிவேம்பு பிரேதேச சபை ஆகியவற்றால் வழங்கப்பட்டுள்ளமையால்  சன நெரிசல் அதிகரித்து விபத்துக்கள் அதிகம் இடம்பெறுகிறது என்பதாக அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி ஜனாப் நசீர்  இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சமயம் குறிப்பிட்டார்.

மேலும் அண்மையில், 40 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது என்பதாகவும் கௌரவ மன்றில் தெரிவித்துள்ளார்.

இன்று அக்கரைப்பற்றுப் பொலிசாரினால், விசாரணையின் மீது திருப்தியடைந்த அக்கரைப்பற்று நீதிமன்ற கௌரவ நீதிபதி ஜனாப் ஹம்சா,     இதற்கான கட்டளையை, எதிர்வரும் 13.10.2020 வழங்கப்படும் என்பதாகத் திறந்த நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.