கொழும்பில் கொன்வென்ற் பாடசாலை மாணவியின் பெற்றோருக்கு கொரோனா..!


 கொழும்பு-07, பிரிஜ்ஜெற்ஸ் கொன்வென்ற் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மாணவி மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் என பாடசாலை நிர்வாகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதவேளை, கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான சுகாதார நடவடிக்கைகள், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய முன்னெடுக்கப்படுவதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.Advertisement