லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் உயிரிழந்துள்ளார்


 


பிக்போஸ் பிரபலமும், தென்னிந்திய நடிகையுமான லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

மரியநேசன் கனடாவிலுள்ள தனது வீட்டில் வைத்து நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக லொஸ்லியாவின் நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாரடைப்பே உயிரிழப்புக்கான காரணம் என உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

மாரியநேசனின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திருகோணமலையிலுள்ள அவரது சொந்த ஊரில் இறுதிக் கிரியைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உறவினர்கள் ட்ரூ சிலோனுக்கு கூறினார்கள்.