களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஒருவருக்கு கொரோனா

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையத்தில் போக்குவரத்து பிரிவில்   பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு   கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளார்.

 களுவாஞ்சிக்குடி  ஆதார வைத்தியசாலையில் தங்கிருந்து   காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்தபோதே இவருக்கான தொற்று நேற்று (5) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த பொலிஸ் நிலையத்தில் கொரோனாவுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை   கிழக்கில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 332ஆக அதிகரித்துள்ளது என  மாகாண சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.


இன்று மட்டும்  13 பேர் வற்றுக்குள்ளாகியுள்ளனர் இதில் அக்கரைப்பற்று 11இஅட்டாளச்சேனை01இகளுவாஞ்சிக்குடி ஒன்று என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.


Advertisement