காரொன்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் இவருடையது

 


கொஹுவல – ஆசிரி மாவத்தை பகுதியில் காரொன்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று (11) முன்னெடுக்கப்படவுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த அரச இரசாயன பகுப்பாய்ப்பாளர், பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காருடன் சடலமும் தீக்கிரையுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

கார் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

களுபோவில – பாத்திய மாவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரவு உணவை பெற்றுக் கொள்வதற்காக இவர் காரில் பயணித்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.