மூன்று ரயில்கள் ரத்து

 


(க.கிஷாந்தன்)

ரயில்வே ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பால் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி புறப்படவிருந்த மூன்று ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நேற்று மாலை 5.50 மணிக்கு செல்லவிருந்த தபால் ரயில் சேவையும், இன்று காலை 5.45 மணிக்கு செல்லவிருந்த பொடி மெனிக்கே மற்றும் காலை 8.30 மணிக்கு செல்லவிருந்த உடரட மெனிக்கே போன்ற ரயில்களும் சேவையில் ஈடுப்படவில்லை.

இதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இதில் சில பயணிகள் வீடு திரும்பியதோடு, சிலர் பஸ்களின் மூலம் பயணங்களை மேற்கொண்டதையும் அவதானிக்க முடிந்திருந்தது.