சிரேஷ்ட பத்திரிகையாளர் தனபாலசிங்கம் அவர்களுக்கு உதவிடுவோம்!


இலங்கையின் நன்மதிப்புமிக்க சிரேஷ்ட பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தற்போது சுகவீனமுற்றிருப்பதை அறிந்து மிகவும் வேதனையுறுகின்றேன். அவருக்கு விரைவில் சிறுநீரக மாற்றுச்சிசிச்சை மேற்கொள்ளவேண்டிய தேவை உள்ளதை குடும்பத்தார் மூலம் அறிந்துகொண்டேன். வீரகேசரிப் பத்திரிகையில் 1977ம் ஆண்டில் தனது ஊடக வாழ்வை ஆரம்பித்து 20வருடகால சேவையின் பின்னர் தமிழ்ப்பத்திரிகை உலகில் புதிய புரட்சியை நிகழ்த்திய தினக்குரல் பத்திரிகையின் வருகையில் முக்கிய பங்காற்றிய தனபாலசிங்கம் அவர்கள் தமிழ் பேசும் மக்களுக்கு தனது எழுத்துக்கள் மூலமாக கடந்த நான்கு தசாப்த காலமாக ஆற்றிய அபரிமிதமான பங்களிப்பை நாம் அனைவரும் நன்றியுடன் நினைவுகூரவேண்டும்.
தமிழ் கூறும் உலகில் நன்கறியப்பட்ட மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி தனபாலசிங்கத்தை பற்றி கூறும் போது 'தனபாலசிங்கம் தீட்சண்ணியமுள்ள செய்தித் தெரிவிப்பாளர். அதற்கு மேல் அரசியல் விமர்சகர் .அதற்கும் மேல் எதிர்கால வரலாற்றைக் கோடிட்டுக் காட்டும் சிந்தனையாளன் ' என்று கூறியிருந்தார். சிறுபான்மையினர் முன்னெப்போதுமில்லாத நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தனபாலசிங்கம் போன்ற தூரதிருஷ்டிமிக்க ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். இப்படியானவர்கள் வாழும் போதே அவர்களது பெறுமதியை இனத்தின் எதிர்காலத்திற்காக உணர்ந்து இன்னமும் பல தசாப்தங்களுக்கு பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.
இவருடைய சிறுநீரக மாற்றுச்சிசிச்சைக்காக 4 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது. இதனை முன்னிட்டு, நலன் விரும்பிகளிடம் நிதி சேர்க்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. உங்களால் முடிந்த உதவியை மனமுவந்து செய்ய முன்வருமாறு பணிவன்புடன் கேட்டு நிற்கிறேன்.
வங்கி விபரங்கள் வருமாறு:
V. Thanabalasingham
Account number 8086480301
Commercial Bank
Kotahena Branch, Colombo 13
Swift code: CCEYLKLX
Bank code: 7056 Branch code: 12