ஏறாவூர் பிரதான சாலையில்


மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதான சாலையில் உள்ள டயலொக் பிரதான கிளைக்கு அருகாமையில் இந்த மோட்டார் சைக்கிள் விபத்து இடம்பெற்றுள்ளது.


அதிவேகமாக பயணம் செய்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து சிறியரக பட்டா ஒன்றுடன் பின்னால் மோதுண்டு விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


எம் .ஜே பஸ்லின்