பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம்

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


2021 ஆண்டுக்கான முதலாவது  பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று (10) நாவிதன்வெளி பிரதேச செயலக  கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் எதிர்கால நலன்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான கருத்துக்கள் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் மேற்குறித்த பிரதேசத்தில் இடம்பெறவுள்ள சிறுவர் மற்றும் பெண்கள் சார் நிகழ்வுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

மேற்குறித்த கூட்டத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு விளக்கங்கள் ஆலோசனைகளை கூட்டத்தில் கலந்து கொண்ட தரப்பினருக்கு வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில்   கிராம நிர்வாக சேவை உத்தியோகத்தர் மனோஜ் இந்திரஜித் ,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எஸ்.சிவம்  ,சவளக்கடை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர்   எஸ்.ரவீந்திரராசா, அம்பாறை மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் யு.எல். அசார்டீன் ,நாவிதன்வெளி பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ரி.கலா, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எஸ்.சிபாயா, மற்றும் சிறுவர் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்கள், சிறுவர் பெண்கள் தொடர்பில் கடமையாற்றும் அரச அரச சார்பற்ற திணைக்கள உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.