குளவி கொட்டியது


 (க.கிஷாந்தன்)

 

தலவாக்கலை ட்ரூப் தோட்டத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 8 பேர் இன்று (30.03.2021) மாலை 3 மணியளவில் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 

உயிரிழந்த நபரொருவரின் சடலத்தை மயானத்தில் அடக்கம் செய்வதற்காக கொண்டுசெல்லப்படும் வேளை, பட்டாசு கொளுத்தி வீசப்பட்டுள்ளது. இவ்வாறு வீசப்பட்ட பட்டாசு குளவிக்கூடு மீது விழுந்துள்ளது. இதனையடுத்தே குளவிகள் கலைந்து வந்து அவ்வீதி ஊடாக பயணித்தவர்கள் மீது சரமாரியாக கொட்டியுள்ளன.

 

குளவிக்கொட்டால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எவரின் நிலைமையும் பாரதூரமானதாக இல்லை. சிகிச்சைகளின் பின்னர் அவர்கள் வீட்டுக்கு அனுப்படுவார்கள் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.