விவசாயப் போதனாசிரியர் தரம் III பதவி

 


கிழக்கு மாகாண பொதுச்சேவையின் விவசாயப் போதனாசிரியர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு

செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை - 2021 க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கல்வித் தகைமைகள்

1 சிங்களம் / தமிழ் / ஆங்கில மொழி, விஞ்ஞானம், கணிதம் மற்றும் வேறு ஒரு பாடம்உள்ளடங்கலாக கல்விப் பொதுத்தராதர (சா/த) பரீட்சையில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்

அத்துடன்,

2 தூயகணிதம், பிரயோக கணிதம், பௌதிகவியல், இரசாயனவியல், இணைந்த கணிதம், உயிரியல், விவசாயம் ஆகியவற்றில் 02 பாடங்கள் உள்ளடங்கலாக விஞ்ஞான / கணிதம் / தொழிநுட்ப பிரிவுகளில் மூன்று (03) பாடங்களில் கல்விப் பொதுத்தராதர (உ/த) பரீட்சையில் பிரிவின் கீழ் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும் (பொது ஆங்கிலம் மற்றும் சாதாரண பொதுப்பரீட்சை தவிர்ந்த)

3. தொழில்சார் தகைமைகள்

அ. குண்டசாலை, அங்குனகொலபெலெஸ்ஸ, பெல்வெஹெர, பிபிலை, லபுதுவ, வாரியபொல, வவுனியா, அநுராதபுரம், கரபிஞ்ச போன்ற ஏதேனும் ; ஒரு விவசாயக் கல்லூரியினால் வழங்கப்படும் இரண்டு (02) வருட விவசாய டிப்ளோமா சான்றிதழைப் பெற்றிருத்தல்.

அல்லது

ஆ. ஹார்டி தொழிநுட்பக் கல்லூரியினால் வழங்கப்படும் விவசாய டிப்ளோமா சான்றிதழைப் பெற்றிருத்தல்

அல்லது

இ. அரச அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு நிறுவனத்தினால் வழங்கப்படும் இரண்டு (02) வருட விவசாய டிப்ளோமா சான்றிதழைப் பெற்றிருத்தல்

அல்லது

ஈ. மேற்படி தகைமைகளுக்குச் சமமானது என இலங்கை தொழிநுட்ப சேவைகள் சபையினால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய வேறு ஏதேனும் தகைமையைக் கொண்டிருத்தல்.
🌐 முழுமையான விபரங்களுக்கு  - https://form.lk/?categoryID=5fd8bd3fcdc9783efc401014
📅 முடிவுத்திகதி - 31.03.2021