ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்டெல்லி:

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாம்சன் 42 ரன்கள் எடுத்திருந்தார். மும்பை தரப்பில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டும் போல்ட், பும்ரா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ரோகித் சர்மா 14 சூர்ய குமார் யாதவ் 16 ரன்கள் எடுத்து வெளியேறினர். டிகாக் குர்ணால் பாண்ட்யா ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குர்ணால் பாண்ட்யா 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 


குர்ணால் பாண்ட்யா அவுட் ஆன காட்சி

இறுதியில் 9 பந்துகள் மீதமுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடி டிகாக் 50 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்தார். பொல்லார்டு 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.  இது மும்பை அணிக்கு 3-வது வெற்றி ஆகும். 

ராஜஸ்தான் தரப்பில் மோரிஸ் 2 விக்கெட்டும் முஸ்பிகுர் ரகுமான் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்